ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வேண்டும்..! மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்..!

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கக் கோரி, மதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது.

Signaturecampaign

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கக் கோரி, மதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது.

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் மீதான நீதிமன்ற காவலை வரும் ஜூலை 12வரையில் நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார். வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி உள்ளிட்ட குற்றவழக்குகளை எதிர் கொண்டுள்ளார்.

செந்தில் பாலாஜி மீது ஊழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில் அமைச்சர் பதவியில் அவர் தொடர்ந்தால் அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் இந்த அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கக் கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

இந்த கையெழுத்து இயக்கதில், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஸ்குமார் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளோட்டர் கையெழுத்திட்டனர். இதற்கிடையில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் அறிவிப்பை ஆளுநர் ரவி தரப்பு நிறுத்தி வைத்துள்ளதாக, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.