அன்பு தம்பி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – சீமான் ட்வீட்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.

தளபதி விஜய் இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகை சார்ந்த பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தனது இயல்பான நடிப்பாலும், நளினமான நடனத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் உள்ளங்களையும் கவர்ந்து தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக மிளிரும் அன்புத்தம்பி விஜய்அவர்களுக்கு எனது உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!’ என பதிவிட்டுள்ளார்.

unknown node