#BREAKING: ஹெலிகாப்டர் விபத்து – கேப்டன் வருண் சிங் உயிரிழந்தார்..!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்தார்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கடந்த 8 ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள், விமானப்படை அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீ காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கேப்டன் வருண் சிங்கை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக போராடி வருவதாகவும், கேப்டன் வருண் சிங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண்  சிங் உயிரிழந்தார். இதனால் குன்னூர் அருகே காட்டேரியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 13 இருந்து 14 ஆக உயர்ந்துள்ளது.

முப்படை தளபதி உட்பட 13 பேர் கடந்த 8ஆம் தேதி உயிரிழந்த நிலையில் தற்போது கேப்டன் வருண் சிங் உயிரிழந்துள்ளார். கேப்டன் வருண் சிங் உயிரிழந்ததை தொடர்ந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பெரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

unknown node
#BREAKING: ஹெலிகாப்டர் விபத்து – கேப்டன் வருண் சிங் உயிரிழந்தார்..!