திரையரங்குகளில் வாகன நிறுத்துமிட கட்டணத்தை உயர்த்த உயர்நீதிமன்றம் மறுப்பு!!

Chennai High Court has refused to raise parking fees in theaters.

திரையரங்குகளில் வாகன நிறுத்துமிட கட்டணத்தை உயர்த்த சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக திரையரங்குகளில் வாகன நிறுத்துமிட கட்டணம் குறைவாக இருப்பதால், கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால் அது பொதுநலனுக்கு எதிரானது என்றும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் 2017ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் குறைவாக இருப்பதால், கட்டணத்தை அதிகரிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.