இரவல் ஆளுநராக இருந்தாலும் எல்லாவற்றையும் செய்ய முடியும் என தமிழிசை பேட்டி.
தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தற்போது தெலுங்கானா ஆளுநராக பதவியில் இருந்து வருகிறார். அதே போல, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவை
இந்த நிலையில், மார்ச் மாதம் 13ஆம் தேதி புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி, நேற்று ஆளுநர் தமிழிசை உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது.
இரவல் கவர்னர் வேண்டாம்
unknown nodeஅப்போது, சட்ட பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு என்பவர் பதாகைகளை சுமந்து வந்திருந்தார். அதில், மத்திய அரசே புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநர் வேண்டும். இரவல் ஆளுநர் வேண்டாம் என எழுதப்பட்டு இருந்தது.
தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி
unknown nodeஇந்த நிலையில், இன்று ஆளுநர் தமிழிசை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், புதுச்சேரி பலவகைகளில் முன்னேறி வருகிறது. அதற்கு 13 ஆண்டுகளுக்கு பின் பட்ஜெட் தாக்கல் நடைபெறுவதை முன்னுதாரணம். இரவல் ஆளுநர் என்று, விமர்சிக்கப்படும் நிலையில்தான் முழு நேர பட்ஜெட் தாக்கல் செய்கிறோம்.
இரக்கமுள்ள ஆளுநராக பணியாற்றுகிறேன்
இரவல் ஆளுநராக இருந்தாலும் எல்லாவற்றையும் செய்ய முடியும். இரக்கமுள்ள ஆளுநராகவே நான் பணியாற்றி வருகிறேன். என்னை பொறுத்தவரை ஒரு சகோதரியாக மகளிர் தின விழாவில் பங்கேற்க தமிழகத்திற்கு நான் வருவதை யாராலும் தடுக்க முடியாது. யார் என்ன சொன்னாலும் தமிழகத்திற்கு வந்து கொண்டு தான் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.