நான் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மரியாதை கொடுத்தேன்..! பிரதமர் மோடி உரை..!

மாநிலங்களவையில், தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மரியாதை கொடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

மாநிலங்களவையில், தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மரியாதை கொடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

இன்று நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அவரது உரையில் பெண்கள் நலனில் அரசின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். நாடு முழுவது 11 கோடி கழிப்பறைகள் கட்டி தாய்மார்களுக்கும் மற்றும் சகோதரிகளுக்கும் மரியாதை  அளித்துள்ளதாக கூறினார்.

எங்கள் மகள்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் பள்ளியில் தனி கழிப்பறைகள் கட்டினோம் என்று அவர் மேலும் கூறினார். ராணுவத்தில் எங்கள் மகள்கள் பணிபுரிய அவற்றின் கதவுகளை திறந்துவிட்டோம் என்றும் நாட்டை பாதுகாக்க அவர்கள் சியாச்சினில் பணியாற்றுவதைக் கண்டு நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று பிரதமர் மோடி கூறினார்.