வீடு திரும்பியுள்ள முதல்வர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவைச்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி மூன்று நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
unknown nodeஇந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டரில், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.