ராகுல் காந்திக்காக எனது பதவியை விட்டுக் கொடுப்பேன்..! காங்கிரஸ் எம்பி விவேக் தங்கா

ராகுல் காந்திக்காக எனது பதவியை விட்டுக் கொடுப்பேன் என காங்கிரஸ் எம்பி விவேக் தங்கா கூறியுள்ளார்.

ராகுல் காந்திக்காக எனது பதவியை விட்டுக் கொடுப்பேன் என காங்கிரஸ் எம்பி விவேக் தங்கா கூறியுள்ளார்.

2 ஆண்டுகள் சிறை :

கர்நாடகாவின் கோலாறில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுல்காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ராகுல் காந்தி தகுதிநீக்கம் :

மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல்காந்தியை வயநாடு மக்களவை தொகுதி எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சியினர் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பதவியை விட்டுக்கொடுப்பேன் :

இந்நிலையில், உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான விவேக் தங்கா, ராகுல் காந்திக்காக தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளார். இது குறித்து விவேக் தங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நிச்சயம் ராகுல் காந்திக்கு நீதி கிடைத்து விரைவில் மக்களவைக்கு திரும்புவார். நீதி தாமதமாகிறது ஆனால் மறுக்கப்படுவதில்லை என்று கூறியுள்ளார்.

unknown node

மேலும், குவாலியரில் இளைஞர் காங்கிரஸின் (Indian Youth Congress)பேரணியில் எனது ராஜ்யசபா இருக்கையை ராகுலுக்கு வழங்கினேன். ராகுல்காந்தி இல்லாத நாடாளுமன்றம் ஏழையாகிவிடும். அவர் இல்லாதது நமது ஜனநாயகத்தை பாதிக்கும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பி விவேக் தங்கா கூறியுள்ளார்.