நேற்று சிவகங்கையில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நிகழ்வு நடைபெற்றது. இதுகுறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனைத்தும் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
அந்த பதிவில், ‘மக்களைச் சந்தித்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஅவர்களது ஒன்பதாண்டு கால சாதனைகளைக் கூறும் நமது பயணத்தின் பெயர் ‘என் மண் என் மக்கள்’. மத்திய அரசின் மக்களுக்கான நலத்திட்டங்கள், அதன் மூலம் பயனடைந்த இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்கள் என கோடிக்கணக்கானோர் நம்மோடு இருக்கிறார்கள்.
ஆனால், திமுக ஒரு நடைபயணம் சென்றால், அதன் பெயர் ‘என் மகன் என் பேரன்’ என்பதாகத்தான் இருக்கும். சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாதாமாதம் சம்பளம் கொடுத்து ஊழலுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது திமுக. இன்றைய நடைபயணத்தில், தர்மப் போராளி அண்ணன் எச்.ராஜாஅவர்கள் மற்றும் சிவகங்கை மாவட்டத் தலைவர் சக்திஆகியோர் உடனிருந்தனர்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node