இந்த அறிவிப்பை தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் வெளியிட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும் – விஜயகாந்த்

DMDK president Vijayakanth issued a statement on the occasion of National Doctor's Day.

vijayakanth

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு, தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தகுதிக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.

கடவுளுக்கு இணையாக போற்றப்படும் மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பை தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் வெளியிட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.’ என தெரிவித்துள்ளார்.

unknown node