காயத்ரி ரகுராம் அவர்கள் பாஜகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்.
காயத்ரி ரகுராம் அவர்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் ஒப்புதலின்படி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் லோகநாதன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின்படி, 6 மாத காலம் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த திருமதி.காயத்ரி ரகுராம் அவர்கள், தனது சுய விருப்பத்தின் பெயரில் கட்சியிலிருந்து விலகுவதாக சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
அத்துடன் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் அவர்களுக்கு வாட்ஸ் அப்பில் “நான் ராஜினாமா செய்கிறேன்’ என்று செய்தியும் அனுப்பி இருந்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, மாநில தலைவர் திரு. K.அண்ணாமலை அவர்களின் ஒப்புதலின்படி திருமதி காயத்ரி ரகுராம் அவர்கள் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது எதிர்கால முயற்சிகளும், பணிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள் ! என தெரிவிக்கப்பட்டுள்ளது.