இந்தியாவில் தமிழ்நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு சிறப்பாக உள்ளது- கிரண் ரிஜிஜு புகழாரம்.!

மதுரையில் நீதிமன்ற வளாகங்களை திறக்க அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தமிழக நீதித்துறை குறித்து புகழ்ந்துள்ளார்.

மதுரையில் நீதிமன்ற வளாகங்களை திறக்க அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தமிழக நீதித்துறை குறித்து புகழ்ந்துள்ளார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற வளாகங்களை திறக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, சென்னை உயர்நீதிமன்ற நீதிபத்தி டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு கூடுதல் வளாகம் அமைக்கவும், மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்திற்கு கூடுதல் வளாகம் அமைக்கவும் 166 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் விழா காணொளி வாயிலாக நடைபெற்றது.

unknown node

மதுரையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழ்நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு, இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது, மற்றும் கொரோனா நெருக்கடி காலங்களிலும் சென்னை உயர்நீதிமன்றம், மாநிலத்தின் மற்ற நீதிமன்றங்களும் சிறப்பான முறையில் செயல்பட்டதாகவும் கூறியுள்ளார்.

unknown node