லாகூர் குண்டுவெடிப்பின் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த இந்தியா

India retaliates for Pakistan's accusation of Lahore bombing

லாகூரில் ஜமாஅத் உத் தவா தலைவரும் பயங்கரவாதியுமான ஹபீஸ் சயீத்தின் இல்லத்திற்கு அருகே சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்ததுள்ளது.

“இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதாரமற்ற பிரச்சாரத்தில் ஈடுபடுவது புதியதல்ல. பாக்கிஸ்தான் தனது வீட்டை ஒழுங்கமைப்பதிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக நம்பகமான நடவடிக்கை எடுப்பதிலும் அதே முயற்சியை செலவிடுவது நல்லது” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.