இனியும் பொறுக்க மாட்டார்கள் அப்பாவி மக்கள், ஜாக்கிரதை..! – கமலஹாசன்

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கமலஹாசன் ட்வீட்.

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கமலஹாசன் ட்வீட்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் மாற்றுவது போல, சமையல் எரிவாயுவின் விலையையும் மாதத்திற்கு ஒருமுறை மாற்றுகிறது. இந்நிலையில், வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.850 ரூபாயிலிருந்து ரூ.875 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மேலும் 25 ரூபாய் உயர்ந்திருக்கிறது சமையல்வாயு. பொன்முட்டையிடும் வாத்தாக மக்களை நினைக்கிறது மத்திய அரசு. இனியும் பொறுக்க மாட்டார்கள் அப்பாவி மக்கள். ஜாக்கிரதை!’  பதிவிட்டுள்ளார்.

unknown node