தீவிரமெடுக்கும் தொகுதி பங்கீடு.. திமுக- இந்திய கம்யூ., பேச்சு..!

The Communist Party of India is set to resume talks with the DMK shortly.

சற்று நேரத்தில் திமுகவுடன் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளது.

தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதனால், சற்று நேரத்தில் திமுகவுடன் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளது.

10 தொகுதிகளுக்கு மேல் இந்திய கம்யூனிஸ்ட் ஒதுக்க கோரிக்கை வைத்த நிலையில், திமுக 6 தொகுதிகள் வரை ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. திமுக, இந்திய கம்யூனிஸ்ட் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.