பலரின் தியாகத்தாலும், பலரின் அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு அஞ்சுவதா? என அண்ணாமலை அறிக்கை.
அண்ணாமலை அவர்கள் கட்சியின் தொண்டர்கள் விமர்சனத்துக்கு அஞ்சாக் கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பலரின் தியாகத்தாலும், பலரின் அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு அஞ்சுவதா? விமர்சனங்கள் நமது கட்சியின் வளர்ச்சிக்கான உரம் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், அவதூறுகளை ஒதுக்கி தள்ளுங்கள்.
சமீப காலமாக என் மீது சமூக வலைத்தளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நமது கட்சியின் சகோதர சகோதிரிகளும் தன்னார்வலர்களும் மிக ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றி வருவதாக அறிகிறேன்.கட்சியின் தொண்டர்களும் தன்னார்வலர்களும் தங்களது சமூக வலைத்தளங்களில் எதிர்வினையாற்றும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
unknown nodeமக்கள் பணியில் நாட்டம் கொண்டு, பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும் நீங்கள், நமது கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுக்கோ, எதிர்கட்சியினரின் வீண் விமர்சனங்களுக்கோ அல்லது சில பல சமூக வலைதள பரப்புரையாளர்களுக்கோ செவி சாய்க்காமல், உங்கள் தொகுதியில் நமது கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றுங்கள்.
என் மேல் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்; சில பத்திரிக்கைகள் என்னை பற்றி அவதூறு பரப்பினால் தான் அவர்களின் பிழைப்பு நடக்கும் என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர். நமது செயல்பாடுகள் அவதூறு பரப்புவோருக்கு எரிச்சல் தருமேயானால், நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பதையே அது வெளிக்காட்டுகிறது.
unknown nodeஉங்கள் கருத்தை முன்வைக்க தயங்காதீர், பகிரங்கமாக உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்! அதே சமயம், அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாக கொண்டு இயங்கி வரும் சிலருக்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
unknown node