தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலேயே இந்த நிலைமை. இப்படி இயற்கை வளங்களை சூறையாடுவது தான் நீங்கள் கொடுக்கும் பாதுகாப்பா? என அண்ணாமலை ட்வீட்.
காவிரி டெல்டா பகுதியில் 8 புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,’காவிரி டெல்டா பகுதியில் 8 புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது திமுகஅரசு. தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலேயே இந்த நிலைமை. இப்படி இயற்கை வளங்களை சூறையாடுவது தான் நீங்கள் கொடுக்கும் பாதுகாப்பா?
விவசாயிகளின் கோரிக்கைகளை திமுகஅரசு ஏற்றுப் புதிதாக தொடங்கப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்பதேஎதிர்பார்ப்பு.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node