இதுதான் விடியா அரசின் பத்திரிக்கை சுதந்திரமா? – எடப்பாடி பழனிசாமி

— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 15, 2021

பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கடுமையாக கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்.

கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த சோதனையின் போது, தனியார் டிவி சேனலை சேர்ந்த கேமராமேன் ஒருவர் போலீசாரால், தாக்கப்படும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,விடியா அரசின் பழிவாங்கும் நடவடிக்கையில், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணிஅவர்கள் மீது ஏவப்பட்ட சோதனையின் போது நமது அம்மா நாளிதழ் தாக்கப்பட்டது, இன்று முன்னாள் அமைச்சர் திரு.தங்கமணிஅவர்கள் மீது நடத்தப்படும் சோதனையின் பொழுது, தனியார் டிவி சேனலை சேர்ந்தகேமராமேன், திரு.ஆண்ட்ரூஸ் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்துகின்றனர், இதுதான் விடியா அரசின் பத்திரிக்கை சுதந்திரமா? தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கடுமையாக கண்டிக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node