நன்றி சொல்ல நாப்பரப்பும் நாட்பரப்பும் போதா... மனமே தருகிறேன்... ஏந்திக்கொள்க..! – கமலஹாசன்

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கமலஹாசன் ட்வீட்.

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கமலஹாசன் ட்வீட்.

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், கமலஹாசன் அனைவரும் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பரந்த வெளியில் ஆரத்தழுவ அவாவும் ஆதுரக்கை விரித்திருந்தேன். ஆயிரம் லட்சமென ஆகாயத் துளிகள் வாழ்த்தாய்ப் பெய்தன. திரைக் கலைஞர், நண்பர் என ஒவ்வொரு துளிக்கும் தனித்தனியே நன்றி சொல்ல நாப்பரப்பும் நாட்பரப்பும் போதா. மனமே தருகிறேன். ஏந்திக்கொள்க.’ என பதிவிட்டுள்ளார்.

நன்றி சொல்ல நாப்பரப்பும் நாட்பரப்பும் போதா... மனமே தருகிறேன்... ஏந்திக்கொள்க..! – கமலஹாசன்