மக்களை சமாளிக்கவே போடப்பட்ட பட்ஜெட்டாக தெரிகிறது என டிடிவி தினகரன் பேட்டி.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட மகளீருக்கான உரிமை தொகை குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
மக்களை சமாளிக்கவே போடப்பட்ட பட்ஜெட்
இதுகுறித்து தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மக்களை சமாளிக்கவே போடப்பட்ட பட்ஜெட்டாக தெரிகிறது. ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதியத்திட்டம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.