இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கியதே நீதிக்கட்சி ஆட்சிதான் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

The Chief Minister said that anyone can become a priest regardless of who is properly trained.

Tamilnadu CM MK Stalin

முறையாக பயிற்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என முதல்வர் பேச்சு.

சென்னை மயிலாப்பூரில் அறநிலையத்துறை சார்பில் 34 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதல்வர் கலந்து கொண்டு  உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சாதியால் யாரையும் தள்ளி வைக்க கூடாது என்று நோக்கில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று திட்டம் அமல்படுத்தப்பட்டது.

முறையாக பயிற்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் பின்பற்றுகின்றனர். அனைவரும் கோலாச்ச வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம்.

ஏராளமான கோயில்களில் குடமழுக்கு உள்ளிட்ட பணிகளை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பல்வேறு கோவில்களில் திருப்பணிகளை செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கியது நீதிக்கட்சி ஆட்சிதான். மேலும் அறம் சார்ந்த தொண்டுகள் செய்வதால் தான் இந்து சமய அறநிலையத்துறை என பெயர் பெற்றது என தெரிவித்துள்ளார்.