#BreakingNews : உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்போம் – சசிகலா

Jayalalithaa’s loyal cadre should stand together and work towards winning the upcoming elections in Tamil Nadu -VK Sasikala after paying respects to Jayalalithaa

விரைவில் நான் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனால் சென்னை தியாகராயர் நகரில் உள்ளஇல்லத்திலேயே இருந்து ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினார் சசிகலா.

மரியாதையை செலுத்திய பின் சசிகலா பேசுகையில்,100 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறிச்சென்றதே நம்முடைய இலக்கு. நிச்சயமாக நீங்கள் செய்வீர்கள், நானும் துணையிருப்பேன்.விரைவில் நான் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன்.ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் , அதற்கு நான் துணையாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.