ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ மறைவுக்கு முதல்வர் இரங்கல்.
ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘
மாண்புமிகு ஜார்க்கண்ட் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மாண்புமிகு ஜார்கண்ட் முதல்வருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node