#JustNow:காவல்நிலையத்தில் திடீர் விசிட் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆவடி அருகே நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்று நரிக்குறவ மாணவிகளுடன் கலந்துரையாடினர்.அதன்பின்னர் நரிக்குறவ

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆவடி அருகே நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்று நரிக்குறவ மாணவிகளுடன் கலந்துரையாடினர்.அதன்பின்னர் நரிக்குறவ மாணவி இல்லத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் நாட்டுக்கோழி குழம்புடன் இட்லி,வடை, உள்ளிட்ட காலை சிற்றுண்டி அருந்தினார்.மேலும் நரிக்குறவ மாணவிக்கு இட்லி ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.இதனைத் தொடர்ந்து,அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில்,ஆவடியில் இருந்து சென்னை திரும்பும் வழியில் T1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திடீர் விசிட் மேற்கொண்டார்.அதன்பின்னர்,வழக்குகளின் பதிவேடுகள் , பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

unknown node