4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன்..!

Kamal has released the 4th list of candidates who will contest on behalf of the Makkal Needhi Maiam in the urban local elections.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 4-வது பட்டியலை கமல் வெளியிட்டார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 4-வது பட்டியலை கமல் வெளியிட்டார்.

இதுகுறித்து தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வேட்பாளர்களின் 4-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன். இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மாற்றத்திற்கு வாக்களியுங்களென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை, கோவை , சேலம், திண்டுக்கல், கரூர் மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் உடுமலைப்பேட்டை, கொடைக்கானல் , தேனி அல்லிநகரம், பெரியகுளம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம்,  நாகை ,சீர்காழி, மயிலாடுதுறை நகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மொத்தமாக 150 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதல் 3-கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node