பிரதமர் மோடியை போலத்தான் கமல்ஹாசனும் – சுஹாசினி மணிரத்னம்

Suhasini Maniratnam has said that Kamal will be the same as Prime Minister Modi.

பிரதமர் மோடி எப்படி தனி ஆளாக இருக்கிறாரோ அதேபோன்று கமலும் இருப்பார் என சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், கோவை தெற்கில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அக்‌ஷரா ஹாசன், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் அத்தொகுதியில் நடனமாடி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும், மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டறிக்கைகளையும் மக்களிடம் விநியோகித்தனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சுஹாசினி மணிரத்னம், பிரதமர் மோடி எப்படி தனியாக இருக்கிறாரோ, அவருக்கு அரசியலில் நிறைய பிரச்சனைகள் இருக்கு. ஆனால், குடும்பத்தால் பெரிய பிரச்சனை இல்லை. அதேபோல, கமலுக்கு குடும்பத்தில் யாரும் பிரச்சனை தரமாட்டார்கள். அவர் கட்சியில் இருப்பவர்களும், எதாவது தவறு நடந்தால், வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என கூறியுள்ளார்.