KarnatakaElections2023: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18% வாக்குகள் பதிவு..!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Karnataka Assembly elections

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18% வாக்குகள் பதிவாகியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அதன்படி, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18% வாக்குகள் பதிவாகியுள்ளது. முன்னதாக, 1 மணி நிலவரப்படி, 44.16% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் தற்பொழுது 52.18% ஆக பதிவாகியுள்ளது.

இந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் முதல் கட்டமாக கிட்டத்தட்ட 9.17 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். இந்த தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகள் வரும் மே 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.