யாரும் செய்யாததையா கே.டி.ராகவன் செய்து விட்டார் : சீமான் கேள்வி..!

What no one does ..? KD Raghavan has done it. Seaman questioned whether he had done something that had not happened anywhere in the world.

யாரும் செய்யாததையா..? கே.டி.ராகவன் செய்துவிட்டார். உலகில் எங்குமே நடக்காத ஒன்றை அவர் செய்துவிட்டார் என சீமான் கேள்வி எழுப்பினார்.

பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவனுக்கு எதிராக பாலியல் தொடர்பான வீடியோசமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, தான் வகித்த மாநில பொதுச் செயலாளர் பதவியை கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார்.  இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த விவகாரம் சமூக குப்பை என்றும் யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார்? அறைக்குள் நடந்த தனிப்பட்ட விஷயத்தை பதிவு செய்வது சமூக குற்றம். அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டவரை கைது செய்ய வேண்டும்.

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்துள்ளனர். அதையெல்லாம்தான் தவறு. அதை விட்டுவிட்டு, அவர் தனது அறையில் செய்ததை வீடியோ எடுத்து வெளியிடுவது கேடுகெட்ட சமுகம் ஆகிவிட்டதோ..? என தெரிவித்தார். விவாதமே இல்லாமல் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவது உள்ளிட்ட விஷயங்களை தான் பேச வேண்டுமே தவிர கே.டி ராகவன் குறித்து பேசுவதெல்லாம் காலக்கொடுமை என கூறினார்.