தன் கட்சிக்காரரை ஓங்கி அறைந்து..கன்னத்தை பழுக்கவிட்ட கே எஸ் அழகிரி..!!

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தாக்கப்பட்டனர் இந்தத் தாக்குதலை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

தலைநகர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டதில் கட்சி நிர்வாகி ஒருவரின் கன்னத்தில் அக்கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தாக்கப்பட்டனர் இந்தத் தாக்குதலை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் சில மாணவ அமைப்புகள்  காங்கிரசார் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர் இதனால் இருவருக்கும் இடையூறு ஏற்பட்டது.இடையூரை சரிசெய்யும் விதமாக மாநில காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே எஸ் அழகிரி  மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகி நரேஷ் என்பவர் மாணவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக. இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் ஆத்திரமடைந்த அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னுடைய கட்சி நிர்வாகி நரேஷை கன்னத்தில் தாக்கினார்.இதனால் அங்கு சற்றும் நேரம் பரபரப்பாக தான் காணப்பட்டது.