7 பேர் விடுதலை குறித்து சட்டப்பூர்வ ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

Legal advice on the release of 7 people and further action - Deputy Chief Minister O. Panneer Selvam

7 பேர் விடுதலையில்  அரசு உறுதியாக உள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் தன்னை விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது.அப்போது ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்றம் அளித்த ஒரு வார கால அவகாசத்தில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில்,பின் ஆளுநர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 விடுதலை செய்வது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தேன். விடுதலை குறித்து முடிவு செய்ய குடியரசுத் தலைவருக்கு  மட்டுமே அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆளுநரின் இந்த முடிவுக்கு தமிழக அரசியல் கட்சியினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ,ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பான பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பூர்வ ஆலோசனை மேற்கொண்டு உரிய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 7 பேர் விடுதலையில் மாண்புமிகு அம்மாவின் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

unknown node