'நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்' – முதல்வரின் மனம் சங்கடப்படக்கூடாது..! – திருச்சி சிவா

முதலமைச்சரின் மனம் சங்கடப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என திருச்சி சிவா பேட்டி.

முதலமைச்சரின் மனம் சங்கடப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என திருச்சி சிவா பேட்டி.

திருச்சியில் டென்னிஸ் அரங்கை திறக்க எம்.பி சிவாவை அழைக்க கோரி அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை மறித்தனர். இதனையடுத்து திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள், அமைச்சர் நேருக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.

திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல்

இதனையடுத்து, அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், எம்பி சிவா வீடு மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவரது வீடு மற்றும் வீட்டின் முன்பு நின்ற கார் கண்ணாடி சேதமடைந்ததுடன், வீட்டில் இருந்த நாற்காலி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி சிவாவை சமாதானப்படுத்திய கே.என்.நேரு

இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி சிவாவை சந்தித்து சமாதானப்படுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு திருச்சி சிவா பேட்டியளித்துள்ளார்.

முதல்வரின் மனம் சங்கடப்படக்கூடாது

அப்போது பேசிய அவர், முதல்வரின் மனம் சங்கடப்படக்கூடாது. நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முதலமைச்சரின் மனம் சங்கடப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நேரு கூறினார் என தெரிவித்துள்ளார்.