#BREAKING: உள்ளாட்சி தேர்தல்.., நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

DMK district secretaries meeting will be held tomorrow at 10 am at Anna Arivalayam, Chennai.

நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படாமல் இருக்கிறது. விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.