மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
இன்று மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலரும் அவரது புகழை பறைசாற்றும் வண்ணம் இணைய பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘”சல்லிக்காசு தரமுடியாது” என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்! நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு! இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம்!’ என பதிவிட்டுள்ளார்.
unknown node