ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இருந்து பலர் தூது விட்டனர் – மு.க.ஸ்டாலின் பேச்சு

Many left the AIADMK after Jayalalithaa's demise - MK Stalin's speech

மக்களால் வாக்களிக்கப்பட்டு ,திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய குறிக்கோள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் பேசுகையில்,ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி ,திமுக ஆட்சி அமைந்துவிடும் என்று பலர் கூறினார்கள்.இதற்காக அதிமுகவில் இருந்து கூட பலர் தூது விட்டனர்.யார் யார் எல்லாம் தூது விட்டார்கள் என்பதை சொல்ல நான் விரும்பவில்லை.சொன்னால் அது நாகரீகம் இல்லை.அவர்களுடைய மனசாட்சிக்கு தெரியும்.அப்படி ஆட்சி அமைத்திருந்தால் ,கலைஞர் அரசாக அமைந்திருக்காது. அப்படி முதலமைச்சராக விரும்பாதவன் நான். கோடி கணக்கான மக்களால் வாக்களிக்கப்பட்டு ,திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய குறிக்கோள்.அத்தகைய ஆட்சி தான் விரைவில் அமையப்போகிறது என்று பேசியுள்ளார்.