கோவை வளர்ச்சி திட்ட பொறுப்பு அமைச்சராக அமைச்சர் முத்துசாமி நியமனம்...!

Minister Muthuswamy has been appointed as Coimbatore district in-charge minister in place of Senthil Balaji.

muthusamy

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் அமைச்சர் முத்துசாமி நியமனம்.

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அவர்கள் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், ஏற்கனேவே  செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்துறை ஆகிய துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த, நலத்திட்ட உதவிகளை கண்காணித்திட பொறுப்பு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.