கலைஞர் நடமாடும் நூலகத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் ‘வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்’ என்ற முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகத்தை அறிமுகப்படுத்தினார்.
‘வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்’ என்ற முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகத்தை, கடந்த 8ம் தேதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகப்படுத்தி வைத்த நிலையில், வாரம் முழுவதும் அவரது தொகுதியில் பயணிக்கும் இந்த நடமாடும் நூலகத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.