அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்து, அங்குள்ள பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
கடந்த வருடம் செப்டம்பர் 15-ஆம் தேதி மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து அரசுப்பள்ளிகளில் 1-5 வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவ்வப்போது ஆய்வு செய்வதுடன், இத்திட்டம் குறித்து கேட்டறிந்து வருகிறார்.
மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் மாவட்டம் அழகு நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில், முதலமைச்சர் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்து, அங்குள்ள பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.