நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  பொறுப்பேற்றது முதற்கொண்டு விளையாட்டு துறையை மேம்படுத்து வகையில் பல்வேறு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழாவில் கலந்து கொள்கிறார்.

பிரதமர் மோடியை சந்திக்கிறார் உதயநிதி

பின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங்  மற்றும் கிரிராஜ் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாப்களின் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.