சாதி மதத்தினை தூக்கிப்பிடித்து பிரிவினை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு.
சட்டப்பேரவையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீரில் மனித கலவை கழிவை கலந்த விவகாரத்தில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வேங்கை வயலில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாத்திய கொடுமைகள் அங்கொன்றும், இங்கொன்றும் இருப்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. குடிநீரில் மனித கழிவை கலந்தது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக 70 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. கிராமத்தில் ஆய்வு செய்தனர்; மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் உள்ளனர். தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது
சாதி மதத்தினை தூக்கிப்பிடித்து பிரிவினை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.