பெரம்பூரில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு வளாகத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு..!

In the newly constructed Gautamapuram Cottage Replacement Board apartment complex in Perambur. Stalin's study

பெரம்பூரில் புதிதாக கட்டப்பட்ட கௌதமபுரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

சமீபத்தில் புளியந்தோப்பு குடிசை வாரியத்தின் கட்டடம் தரமற்ற நிலையில் கட்டி இருப்பதாக புகார்கள் எழுந்தது. அதன் விளைவாக ஐஐடி குழு, அமைச்சர்கள் மற்றும்  சட்டமன்ற உறுப்பினர் அந்த கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், சென்னை கொளத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் கவுதமபுரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, இக்கட்டடத்தின் நிலை மற்றும் தரம் பற்றி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 பிரிவுகள் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 14 மாடிகள் கொண்டது.  மொத்தமாக 840 குடிசை மாற்று வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும் 406 சதுர அடிகொண்டது.