ஜூலை 19 முதல் மழை கால கூட்டத்தொடர்- சபாநாயகர் ஓம் பிர்லா..!

Lok Sabha Speaker Om Birla has announced that the monsoon session of Parliament will be held from July 19 to August 13.

நாடாளுமன்றத்தின் மழை கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஜூலை மாதம் கூட நடைபெறவேண்டிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலதாமதாக செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 18 நாட்கள் நடைபெற வேண்டிய கூட்டத்தொடர்  11 நாட்கள் மட்டுமே நடந்தது.

பின்னர், டிசம்பர் மாதம் நடைபெறவேண்டிய குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு காரணங்களுக்காக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் நடைப்பெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் 19 நாட்கள் இந்த கூட்டுத்தொடர் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.