மன்னார்குடியில் புதிய பேருந்துநிலையம்.! கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.!

மன்னார்குடியில் புதிய பேருந்துநிலைய கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மன்னார்குடியில் புதிய பேருந்துநிலைய கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மன்னார்குடியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு எனும் திட்டத்தின் கீழ் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் வந்துள்ளார்.

unknown node

திருவாரூரில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகளை மேற்பார்வை செய்து விட்டு, திருவாரூர் தியாகராஜ கோவிலின் கமலாலயம் குளத்தில் படகில் சென்றார். அந்த குளமானது தனது பழைய நினைவுகளை நினைவூட்டுவதாக கூறி தனது டிவிட்டர் பக்கத்தில் அது குறித்த புகைப்படங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின்  பகிர்ந்து கொண்டார்.

unknown node

இதனையடுத்து இன்று திருவாரூரில் திமுக பிரமுகரின் திருமண நிகழ்வின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் மன்னார்குடியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.