பீகாரின் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகிய நிலையில், நேற்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று எட்டாவது முறையாக பீகார் மாநில முதல்வராக நிதீஷ்குமார் பதவி ஏற்றுள்ளார்.
பாட்னாவில் ராஜ் பவனில் நிதீஷ் குமாருக்கு ஆளுநர் பகு சவுக்கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பீகார் மாநில துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகாரின் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
unknown node