முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை மட்டும் தொலைபேசி உளவியல் ஆலோசனை மையம் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரனோ பற்றிய சந்தேகம் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.
நடிகர் விவேக் மறைவு குறித்து அவதூறு பரப்பினால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் சமூக வலைதளங்களில் விவேக் மறைவு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அவர் தெரிவித்தார். தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பினாலும், ஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பினால் பொது சுகாதாரத்துறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.