குற்றவாளி எந்த கொம்பனாக இருந்தாலும் காப்பாற்ற மாட்டோம் – முதல்வர் மு..ஸ்டாலின்

இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர் என முதல்வர் பேச்சு

இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர் என முதல்வர் பேச்சு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில் உரையாற்றி வருகிறார். அவர்  பேசுகையில்,ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறோம்; அரசு ஒளிவு மறைவு இல்லாமல் இயங்கி வருகிறது, படிப்படியாக நேரடி ஒளிபரப்பு நடைபெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை விட்டு சென்றது வருத்தமாக உள்ளது.

திமுக தான் ஆள வேண்டும்

unknown node

1 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெற உள்ளார்கள்; மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளது; இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர்.

மக்களுக்கு நேரடியாக, தினமும் பலன் தரும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது; மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை, ஏமாற்றவும் முடியவில்லை; தேர்தலில் மட்டும் வெல்லவில்லை, மக்கள் மனங்களையும் வென்றிருக்கிறோம்.

இது தனிப்பட்ட ஸ்டாலின் அரசு அல்ல, திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசாக, 8 கோடி மக்களின் அரசாக உள்ளது. திராவிட மாடல் அரசாக திகழ்கிறது; மக்கள் நலன், கொள்கை இவை இரண்டையும் முன்னெடுக்கும் ஆட்சியாக 2 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் சாதி, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறை இல்லை, கலவரங்கள் இல்லை, துப்பாக்கிசூடு இல்லை; இதன் அடையாளமாகத்தான் தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் இங்கே வருகின்றன.

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்

unknown node

பிற மாநிலங்களில் நடந்த சம்பவங்களை தமிழ்நாட்டில் நடந்தது போல சித்தரித்து புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரபப்பட்டன; உடனடியாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தினேன் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை தொடர்புகொண்டு புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்தேன்.

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பீகார் யூடியூபர் மணிஷ் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு

unknown node

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? அதை மட்டும் எதிர்க்கட்சி தலைவர் ஏன் சொல்லவே மறுக்கிறார்? முதலமைச்சராக இருந்த போதும் சொல்லவில்லை, இப்போதும் சொல்லவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு அமைதிப்பூங்கா

சாதிச் சண்டை பூசல் இன்றி தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது; காவல்நிலைய மரணங்களை தடுப்பதில் திமுக அரசு சாதனை படைத்துள்ளது; கடந்த ஆட்சியை ஒப்பிடும்போது காவல்நிலைய மரணங்கள் குறைந்துவிட்டது. கோவையில் கடந்த ஆண்டு உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

3 நாளில் இது போன்ற வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியது தமிழ்நாடு அரசு தான்; கோவை பாதுகாப்பை கருதி பல்வேறு பகுதிகளில் புதிய காவல்நிலையங்கள் அமைக்கவும், கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தவும் முடிவெடுக்கப்பட்டன; மத ரீதியிலான மோதல் இன்றி தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது.

திமுக எப்படி அமைதியாக இருக்க முடியும்?

கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பேச்சுகளில் முரண்பாடு, ஏன் இந்த தடுமாற்றம்; கொடநாடு கொலை, கொள்ளையை அப்போதய முதலமைச்சரே மறைக்க முற்படும்போது திமுக எப்படி அமைதியாக இருக்க முடியும்? சிபிசிஐடி விசாரணையில் முழு உண்மையும் வெளிவரும்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியபிறகே அதிமுக அரசு வழக்குப்பதிவு செய்தது; குற்றப்பிரிவு விசாரணை முறைப்படி நடக்காததால் மீண்டும் போராடி அவ்வழக்கை சிபிஐக்கு கொண்டு சென்றோம். இவ்வழக்கில் கைதானவர்களில் அதிமுக இளைஞரணி நிர்வாகியும் ஒருவர்; திமுக ஆட்சிக்கு வந்ததும் சிபிஐக்கு உதவ பெண் எஸ்.பி.யை அரசு நியமித்தது.

நிதி நிறுவன மோசடி

unknown node

ஆரூத்ரா போன்ற நிதி நிறுவனம் குறித்து மக்களிடம் ஆசையை தூண்டி இது போன்ற நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன; இத்தகையை நிதிநிறுவனங்களை கண்காணிக்கு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்; பொதுமக்கள் எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

கோட்டையில் அமர்ந்து திட்டங்களை தீட்டினால் போதாது; மக்களுக்கு நெருக்கமாகச் சென்று திட்டங்களை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக “களஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை தொடங்கினோம்.

போதைப்பொருள் சாம்ராஜ்யம் சரிந்தது

10 ஆண்டு காலமாக வேரூன்றி இருந்த போதைப்பொருள் சாம்ராஜ்யம், அரசு எடுத்த நடவடிக்கைகளால் சரிந்துள்ளது. அதிமுக விட்டுச் சென்ற படு பாதகங்களில் ஒன்று, போதை பொருட்கள்; அதனால்தான், திமுக ஆட்சிக்கு வந்ததும் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை’-யில் போதை பொருட்களை கண்டுபிடித்தோம்.

காவலர்களுக்கான அறிவிப்பு

காவல்துறையில் 101 புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். காவலர் பணியிடங்கள் நிரப்ப தேர்வு வாரியம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

unknown node

பெண் காவலர்களுக்காக சென்னை சிந்தாதிரிபேட்டையில் மகளிர் காவல் விடுதி கட்டப்படும்; ஆண்டுதோறும் காவலர்களுக்கு சீருடைப்படி 4,500 வழங்கப்படும். நெல்லை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ₹10.15 கோடி மதிப்பில் புதிதாக மரபணு ஆய்வுப்பிரிவு உருவாக்கப்படும்.

குற்றவாளிகளை கைது செய்யும் போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த 25 ரிமோட் மூலம் விலங்கிடும் Remote Restraint Wrap கருவி வாங்கப்படும். மோப்ப நாய்கள்/ மோப்ப நாய்களை கையாள்பவர்களுக்கு வழங்கப்படும் உணவு பராமரித்தல் மற்றும் தடுப்பூசிக்கான படி உயர்த்தப்படும். ஒரு நாளைக்கு ஒரு மோப்ப நாய்க்கு வழங்கப்படும் உணவுப்படி 200-ல் இருந்து 300 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மேல்மலையனூர், உள்ளிட்ட 5 இடங்களில் புதிய தாலுக்கா காவல்நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் மாநகர் உட்பட்ட பெரும்பாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட காவல்நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.30,000 ஆகஉயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், திருச்சி, நெல்லை உட்பட 4 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படும். காவல்துறை தலைமை இயக்குநர், தீயணைப்பு இயக்குநர் மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காகசட்ட விவகாரங்களில் இயக்குநரகத்தில் உதவிட சட்டஆலோசகர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும்.

நீதிமன்றங்களில் அரசு உதவிட சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் ஒன்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் நிலுவையிலுள்ள நீதிமன்ற வழக்குகளில் உறுதி ஆவணம்தயாரித்தல், முக்கிய பிரச்சினைகள் சட்டக் கருத்தை வழங்குதல் மற்றும் அரசு தலைமை வழக்குரைஞர், கூடுதல்வழக்குரைஞர் ஆகியோர்களுக்கு உதவுதல் ஆகிய சட்ட விவகாரங்களில் மீட்புப் பணிகள் துறை இயக்குநரகத்தில் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.