உள்நோக்கம் ஏதுமில்லை...! மாற்றுத்திறனாளிகள் தோழர்கள் பொறுத்தருளவும்..! – திருமாவளவன்

Thirumavalavan tweeted, "I never have any intention to hurt people with disabilities or have a light opinion about them.

thirumavalavan

நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத்தும் உள்நோக்கமோ, அவர்களைப்பற்றி இளக்காரமான மதிப்பீடோ கொண்டவனுமில்லை என திருமாவளவன் ட்வீட்.

கடந்த ஜூன்-30 அன்று மேலவளவில் நடந்த “மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல்” நிகழ்வில் உரையாற்றும் போது, விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது திருமணம் குறித்து பேசியிருந்தார். அப்போது பேசிய அவரை,நான் என்ன நொண்டியா முடமா?திருமணம்செய்யாமல் இருக்க என தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திருமாவளவன் அவர்கள் வருத்தம் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கடந்த சூன்-30 அன்று மேலவளவில் நடந்த “மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல்” நிகழ்வில் உரையாற்றும் போது மாற்றுத் திறனாளிகள் மனம்நோகும் வகையில் ஓரிரு சொற்கள் தவறி விழுந்துவிட்டன. அப்போதே அதற்கு எனது வருத்தத்தையும் தெரிவித்தேன்.

மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத்தும் உள்நோக்கமோ, அவர்களைப்பற்றி இளக்காரமான மதிப்பீடோ கொண்டவனுமில்லை. இதனை மாற்றுத் திறனாளிகளுக்கான இயக்கத்தை நடத்தும் முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் அறிவர்.

என்னைப்பற்றி தனிப்பட்டமுறையில் அவதூறுபரப்பும் ஒருசில அற்பர்களைக் கண்டிக்கும் வகையில் நான் ஆதங்கப்பட்டு எனது உரையின் போக்கிலேயே தன்னிலை விளக்கம் அளித்தேன். அப்போது அச்சொற்கள் என்னையும் அறியாமல் தவறுதலாக நா தவறி வந்து விழுந்தன. அதற்காக உடனே எனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன். இனி அவ்வாறு நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன். வருந்துகிறேன். மாற்றுத்திறனாளிகள் தோழர்கள் பொறுத்தருளவும்.’ என தெரிவித்துள்ளார்.

unknown node