இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் பழனிசாமி தரப்பு வெற்றி பெறாது என டிடிவி தினகரன் பேட்டி.
சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தேர்தல் ஆணையம் எங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்காததால், ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் போட்டியிடவில்லை.
யாருக்கும் ஆதரவு இல்லை
unknown node2024 நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் அமமுக போட்டியிடும். என்னிடம் யாரும் பேசி அமமுக வேட்பாளரை வாபஸ் பெற வைக்கவில்லை. ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவுமில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் தீய சக்திகள், துரோக சக்திகளுக்கு அமமுக ஆதரவாளிக்காது.
இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் பழனிசாமி தரப்பு வெற்றி பெறாது. அமமுக தொண்டர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தங்களது முடிவை எடுப்பார்கள் இட தெரிவித்துள்ளார்.