நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் என்று காங்கிரஸ் கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் என்று காங்கிரஸ் கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும்  நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.

unknown node

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி வேட்பாளராக ரூபி’ மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.இதனை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்  முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார்.மேலும் ரூபி’ மனோகரனை சோனியா காந்தி தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.