ஒருபக்கம் தொகுதி பங்கீட்டியில் இழுபறி – மறுபக்கம் நேர்காணலை தொடங்கிய காங்கிரஸ்.!

Interviews are being held with the petitioners of the Congress party at Sathyamoorthy Bhavan in Chennai.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு குறித்து மூன்று கட்டம் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் தரப்பில் 35 லிருந்து தற்போது 27 வரை கேட்கப்பட்டு வரும் நிலையில், திமுக தரப்பில் 22 தான் தர முடியும் என திட்டவட்டமாக கூறி வருகிறார்கள். இதனால் திமுக – காங்கிரஸ் இடையே தொடர் இழுபறி நீடித்து வருகிறது.

இதையடுத்து என்ன செய்து என்று கலந்தாலோசிக்க நேற்று காலை காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கேஎஸ் அழகிரி, தமிழகத்தில் 100 தொகுதிகளில் திமுக வெற்றிக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கிறது. திமுக கவுரவமான முறையில் தொகுதி பங்கீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம் என கூறியவாறு கண்கலங்கியுள்ளார்.

இனிமேல் நான் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு செல்லமாட்டேன், நீங்களே சென்று எண்ணிக்கையை முடிவு செய்யுங்கள், அதன்பிறகு நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.