தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முன்னிட்டு பேருந்துகள் இயக்கத்துக்கு இன்று ஒரு நாள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தினமும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் பொழுது சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வருகிற 24ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால் தற்பொழுது மேலும் ஊரடங்கு ஒரு வாரத்திறகு நீட்டித்து உத்தரவு வெளியாகி உள்ளது. அது மட்டும் அல்லாமல் இந்த ஊரடங்கில் தளர்வுகள் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருகிற ஒரு வாரம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் நேற்று மற்றும் இன்று அனைத்து கடைகள் மற்றும் பேருந்துகளில் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 4500 சிறப்புப் பேருந்துகளும் இன்று இயக்கப்படுகிறது.